Orientation Program on Staff Selection Commission Exams | 9-10-2022 9.30 AM
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்கள் ஒன்றிய அரசின் தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும், ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) ஒன்றிய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs. Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றிலும் மற்றும் உதவியாளர். கண்காணிப்பாளர் (Assistant Superintendent) பணியிடங்கள் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் C பிரிவு பணிகள் 12ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் Combined Higher Secondary Level (CHSL) தேர்வு மூலம் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு (Lower Division Clerks) தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், இப்பொதுப்பணிகள் தவிர Junior Engineer தேர்வு, Stenographer தேர்வு , Sub Inspector in Delhi Police, Central Armed Police Force (CAPF) and Central Industrial Security Force (CIF) தேர்வுகளும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.